60 ஈஃபில் டவர்களைக் கட்டுவதற்கான ஸ்டீல் பலத்துடன் சீனாவின் மிகநீள கடற்பாலம்

By ஏஎஃப்பி

 

பொறியியல் அற்புதன் என்று அழைக்கப்படும் சீனாவின் கடற்பாலம் பிரான்சில் உள்ள ஈஃபில் கோபுரம் போல் 60 ஈஃபில் கோபுரங்களைக் கட்டுவதற்குத் தேவையான ஸ்டீல் பலத்துடன் திகழும்.

உலகின் மிக நீளமான இந்தக் கடற்பாலம் ஹாங்காங் மற்றும் தெற்கு சீன நகரான ஸூஹாய், மக்காவ் ஆகியவற்றை இணைக்கிறது.

இதன் திறப்பு விழா எப்போது என்று சீனா உறுதி செய்யாவிட்டாலும் இந்தப் பாலத்தை 120 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்றும் பயண நேரம் 60% குறைகிறது என்பதால் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மகா கடற்பாலத்துக்காக சுமார் 420,000 டன்கள் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது என்றும் 60 ஈஃபில் டவர்களைக் கட்ட உதவும் ஸ்டீல் அளவாகும் இது என்று ஜினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பொறியியல் அதிசயத்திட்டத்தின் மேலாளர் காவோ சிங்லின் கூறும்போது கடலுக்கடியில் 6.7 கிமீ தூரத்துக்குக் கட்டபடும் குகைப்பாதை தனக்கு பல இரவுகள் தூக்கத்தைப் போக்கியது என்றார்.

“பல இரவுகள் நான் உறங்கவில்லை. ஏனெனில் அதனைக் கட்டுவதற்கு கடுமையான, வார்த்தைகளில் விவரிக்க முடியாத கடினப்பாடுகளைச் சந்தித்தேன். 80,000 டன்கள் பைப்பை கடலுக்கடியில் வாட்டர்டைட் தொழில்நுட்பத்துடன் கட்டமைப்பது சாதாரண காரியமல்ல. மிகவும் சவால் அளிக்கும் பணியாகும்.

இதற்கான செலவு கணக்கிடப்பட முடியாதது என்று பலரும் கூறினாலும் 100 பில்லியன் யுவான் (15.1 பில்லியன் டாலர்கள்) செலவாகும் என்று சிலர் கூறுகின்றனர், விமர்சகர்கள் பலர் இந்தச் செலவுக்கான ஒர்த் இல்லை என்று கூறிவருகின்றனர்.

ஹாங்காங் மீது தங்கள் பிடியை இறுக்கும் முடிவே இந்தக் கடற்பாலம் என்று ஹாங்கங்கில் உள்ள சீன விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கட்டுமான கடினப்பாடுகளினால் கடற்பால வேலை முடிவு தள்ளிப்போய் கொண்டிருக்கிறது, கட்டுமானப்பணியாளர்கள் சிலர் இறந்தும் போயுள்ளனர். இதனால் 2017 இறுதியில் கடற்பாலத்தைத் திறக்க முடியாமல் போனது. பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்