ஸ்டைலாக தாடி, முடிவெட்டு செய்ய மாட்டோம்: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு

By ஏஎஃப்பி

 பாகிஸ்தானில் இளைஞர்களுக்கு ஸ்டைலிஷாக தாடியும், முடிவெட்டும் செய்ய மாட்டோம் என்று சலூன் கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிரெஞ்ச், இங்கிலீஸ் பியர்ட், வித்தியாசமாக முடிவெட்டுதல் போன்ற சிகை அலங்காரங்களை இளைஞர்களுக்கு செய்ய மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கைபர் பக்துன்கவா மாநிலத்தின் சுலைமானி முடிதிருத்துவோர் சங்கத்தின் தலைவர் ஷெரீப் காலோ டான் நாளேடு நிருபர்களிடம் கூறுகையில், ''எங்கள் சங்கத்தில் ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் மேலான உறுப்பினர்கள் உள்ளனர். இனிமேல், இவர்கள் யாரும் இளைஞர்களுக்கு மிகுந்த ஸ்டைலிஷான முறையில் தாடியும், முடிவெட்டும் செய்யமாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் அனைவரும் முஸ்லிம்கள், மதக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். இளைஞர்கள் நாகரிகமான முறையில் முடிவெட்டிக்கொள்ளவும், தாடியை மாற்றி அமைக்கவும் நினைத்தால், எங்களின் கடைக்கு வரத்தேவையில்லை'' என்று தெரிவித்தார்.

வேறு ஏதாவது நெருக்கடிகளோ, அல்லது தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல்களோ வந்ததா? எனக் கேட்டபோது, ''அது மாதிரியான எந்தவிதமான மிரட்டல்களும் வரவில்லை. முஸ்லிம் மதகுருக்களுடன் சேர்ந்து நடத்திய ஆலோசனைக்கு பின்புதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அதில் கான் கூறுகையில், ''எங்கள் சங்கத்துக்கு எதிரான மற்றொரு தரப்பினர் எங்களின் தடை குறித்து தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக சீன-பாகிஸ்தான் பொருளாதார காரிடர் பகுதியில் இருக்கும் வெளிநாட்டினருக்கு இந்த செய்தியை திரித்துக் கூறுகின்றனர். எங்களின் முடிவு என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான். எந்தவிதமான வெளிநாட்டினருக்கும் இது பொருந்தாது'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் உள்ள பல உள்ளாட்சி நிர்வாகங்கள், இளைஞர்கள் ஸ்டைலிஷாக தாடி, முடி வெட்டிக்கொள்ள தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஸ்வாபி, புனர், லோவர் திர், ஸ்வாத், மார்தன் ஆகிய மாவட்டங்கள் முறைப்படி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தடை விதித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்