சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் கவுட்டாவிலிருந்து வெளியேறக் கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்தின் அரசுப் படைக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின்றன.
ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் அதிபர் ஆசாத் படைகள் கடந்த சில வாரங்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை1,260 பேர் பலியாகி உள்ளனர். 22 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
தொடர்ந்து கவுட்டாவில் அரசுப் படைகள் தாக்குதலில் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் உள்நாட்டுப் போர் நடக்கும் கவுட்டா பகுதியிலிருந்து வெளியேறக் கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அக்ரர் அல் ஷாம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முன்சர் ஃபெர்ஸ் கூறும்போது, "சிரியஅரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாங்கள் எங்கள் ஆயுதங்களுடன் வெளியேறுகிறோம். மேலும் பொதுமக்கள்அவர்கள் வேண்டும் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்றார்
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago