விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதக் கப்பலை 10 ஆண்டுகள் கழித்து இலங்கை கடற்படை கொழும்பு அருகே நடுக்கடலில் மூழ்கடித்தது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களது கடற்படைப் பிரிவை 1984-ம் ஆண்டு கடல் புலிகள் என்ற பெயரில் உருவாக்கினார்கள். இந்த கடல் புலிகள் பிரிவுக்கு கர்னல் சூசை தலைமை வகித்தார்.
ஆரம்ப காலங்களில் கடல் புலிகளின் கப்பல்கள், பிற நாடுகளுடனான வாணிபத் தொடர்புக்காகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள போராளிகளைப் பயிற்சிக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்காகவும், வெடிபொருட்கள், போர் தளவாடங்களைச் சேகரிப்பதற்காகவும், காயமுற்றவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கை கடற்படைக்கு எதிராக கடல் புலிகள் பிரிவு பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தியது.
விடுதலைப் புலிகளின் கடற்படையை அழிப்பதற்காக, இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று, 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கடல் புலிகளின் பல கப்பல்களை அழித்தது. சில கப்பல்களை கைப்பற்றியது.
விடுதலைப் புலிகளுக்கு 2007-ம் ஆண்டு உலகளாவிய அளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வந்தவரும், விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்தவருமான கேபி என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்காக கேபி பயன்படுத்திய ஏ522 என்கிற ஆயுதக் கப்பல் இந்தோனேஷியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர்.
பின்னர் இந்த கப்பல் பழுதடைந்தது. இதை பராமரிக்க முடியாததால் ஏலம் விட இலங்கை அரசு முன்வந்தது. ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை.
இதையடுத்து மை கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் ரங்கல முகாமில் இருந்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல், 26-ம் தேதி நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago