இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

By ராய்ட்டர்ஸ்

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தையடுத்து, அடுத்த 10 நாட்களுக்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் வகுப்புவாதத்தை தூண்டுவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் அரசு ஆணையிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு ஆண்டாக முஸ்லிம் சமூகத்தினருக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இலங்கையில் உள்ள மக்களை முஸ்லிம் மதத்துக்கு மாறும் வகையில் மூளைச் சலவை செய்யப்படுகிறது, புத்த கோயில்கள், நினைவுச்சின்னங்களும் அழிக்கப்படுகின்றன என்று புத்த மதத்தினர் தரப்பில் முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் கண்டி அருகே இருக்கும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அம்பாரா பகுதியில் முஸ்லிம்கள் மீது புத்த மதத்சைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் முஸ்லிம்கள் நடத்தி வந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது வன்முறைக் கும்பல் தாக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய நகரான கண்டியில் புத்த மததினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே திடீரென நேற்று முன்தினம் மோதல் ஏற்படத்தொடங்கியது.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இப்போது பெரிய அளவுக்கு கலவரமாக மாறியுள்ளது. முஸ்லிம்களின் கடைகள், வீடுகளுக்கு தீவைத்து எரிக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த கவலரத்தில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார்

இதையடுத்து கண்டி நகரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். .

இந்தக் கலவரம் தொடர்பாக நேற்று அரசின் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் நாட்டில் மதக் கலவரத்தையும், வகுப்புவாதம் பரவுவதையும் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு அவசர நிலையை பிரகரடனப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து அரசின் செய்தித்தொடர்பாளர் ஜெயசிறீ ஜெயசேகரா கூறுகையில், ''நாட்டில் வகுப்புவாதம், மதக் கலவரம் பரவுவதைத் தடுக்கும் வகையில், அடுத்த 10 நாட்களுக்கு நாடுமுழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இந்த கலவரம் தொடர்பாக சார்பற்ற விசாரணை நடத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு இலங்கையில் அலுத்கமா நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதற்குப் பின், முஸ்லிம்களுக்கு எதிராக புத்த துறவிகள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2015-ம் ஆண்டு அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவி ஏற்ற பின், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து இருந்தார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

28 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்