அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய உத்தரவால் ராணுவத்தில் திருநங்கைகள் பணிபுரிவதில் தடை ஏற்பட்டுள்ளது.
திருநங்கைகளை அமெரிக்க ராணுவப் பணியில் சேர்க்கக்கூடாது என்று கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "ராணுவத்தின் செயல்திறனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு இது தொடர்பான ஆணையை ட்ரம்ப் பிறப்பித்தார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா கூறும்போது, "இந்தப் புதிய திட்டம் உளவியல் மற்றும் உடல் ரீதியாக மருந்து உட்கொள்ளும் அனைவருக்கும் பொருந்தும்'' என்றார்.
ட்ரம்பின் இந்த உத்தரவை அமெரிக்காவிலுள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள் பலவும் மாற்றுப் பாலினத்தினருக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் விரோதப் போக்கைக் காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆணை குறித்து மனித உரிமை அமைப்பின் தலைவர் காட் கிரிப்பின் கூறும்போது,
”டிரம்ப்-பென்ஸ் நிர்வாகம் பாகுபாடான முறையில் மாற்றுத் திறனாளிகள் மீது வெறுக்கத்தக்கத் தடையை ஏற்படுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.
ஒபாமா ஆட்சியின்போது (2015 டிசம்பர்) அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டர் ராணுவத்தின் அனைத்துப் பதவியிலும் பெண்கள் இடம்பெறுவர் என அறிவித்தார். இதையடுத்து திருநங்கைகளுக்கும் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago