பப்புவா நியூ கினியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By ஏஎஃப்பி

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில், ”பப்புவா நியூ கினியாவின் கடற்கரைப் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.39 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ளூர் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர் என்றும் பப்புவா நியூ கினியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பப்புவா நியூ கினியாவில் போர்கோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 67 பேர் பலியாகினர். 500 பேர் காயமடைந்தனர்.

ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்