சீனாவின் நிரந்தர அதிபராகும் ஜி ஜின்பிங்

By ஏஎஃப்பி

சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபர் பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனையில் திருத்தம் கொண்டு வரும் தீர்மானம் இன்று நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானம் நிறைவேறுவதன் மூலம் ஜி ஜின்பிங்கின் தற்போதுள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டால் அவர் சீனாவின் நிரந்தர அதிபராக தொடருவார் என்று சீன அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்னர்.

சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சீன அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. தற்போது சீன அதிபரராகவுள்ள ஜி ஜின்பிங் (64) கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் அதிபராகவும் பதவி வகிக்கிறார். செல்வாக்குமிக்கவர் என்று அவரை ஆளும் கட்சினரே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜி ஜின்பிங்கின் பதவி காலம் (2-வது முறை) வரும் 2023-ம் ஆண்டு முடிவடைகிறது. அதன்பின் அவர் அதிபர் பதவி வகிக்க முடியாது. இந் நிலையில் மன்னராட்சியில் உள்ளது போல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் காலவரையின்றித் தானே அதிபர் பதவி வகிக்க ஜி ஜின்பிங் முடிவெடுத்தார். அதற்கேற்ப அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் இதற்கான அதிபர் பதவிக்கான தீர்மானத்துக்கான திருத்தம் இன்று (திங்கட்கிழமை) நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுமார் 3,000 பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் இருப்பது சிறந்ததென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்