லடாக்கில் இருந்து தங்களது நாட்டின் ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் சீனத் தொழிலாளர் கள் சிலர் லடாக் வழியாக இந்தி யாவுக்குள் புகுந்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதுடன் சீன எல்லைக்கே திருப்பி அனுப்பினர்.
இதனால் கோபமடைந்த சீனா, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் லடாக்கில் தனது ராணுவப் படை களை நிறுத்தியது. மேலும், அவர்கள் லடாக் பகுதியை சீனாவுக்கு உட்பட்டது என்றும் கூறி வந்தனர். இதனால் அங்கு இருநாட்டு ராணுவத்தின ருக்குமிடையே மோதல் ஏற்படக் கூடுமோ என்று பதற்றம் நிலவியது.
இந்நிலையில், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுக் கூட்டம் நடப்பதையொட்டி, பல்வேறு நாடுகளின் வெளியு றவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற் றது. இதில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர் களிடம் பேசும்போது, "இந்தியாவும் சீனாவும் லடாக் பகுதியில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன" என்றார்.
மேலும், லடாக் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் ராணுவப் படைகள் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 30ம் தேதி இந்தப் பணி நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை
இந்தக் கூட்டத்தின் போது செய்தியாளர்கள் பாகிஸ்தானு டன் இந்தியா நடத்தவிருந்த பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, "பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராகவே இருந்தது. இருநாட்டு வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்பு நிகழவிருந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஹுரியத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கிடையேயான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தான் கெடுத்து விட்டது" என்றார்.
காஷ்மீர் பிரச்சினை
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப இருப்பதாக பாகிஸ்தான் அறிவித் துள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் அதற்கு உரியவகையில் உடனடியாக பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago