ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள காபூல் பல்கலைக்கழகத்துக்கு அருகில் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கூடிய கூட்டத்தில் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 8 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்'' என்றனர்.
மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் சமீப காலமாக காபூலில் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியதில் 95 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்தத் தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago