கவுடாவிலிருந்து வெளியேறிய கிளர்ச்சியாளர்களின் ஒரு பிரிவினர்

By ஏஎஃப்பி

ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கிளர்ச்சியாளர்களின் ஒரு குழுவினர் கவுட்டாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கிளர்ச்சியாளர்களின் ஒரு அமைப்பான அக்ரர் அல் ஷாம்மின் செய்தித் தொடர்பாளர் முன்சர் ஃபெர்ஸ் சிரியஅரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாங்கள் எங்கள் ஆயுதங்களுடன் வெளியேறுகிறோம். மேலும் பொதுமக்கள்அவர்கள் வேண்டும் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் போர் நிறுத்தத்தைத் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.

மேலும் மற்றுமொரு கிளர்ச்சியாளர்கள் குழுவான ஃபாலாஹ் அல் ரஷ்மான் அமைப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளது. 

ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீத பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் அதிபர் ஆசாத் படைகள் கடந்த சில வாரங்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை1,260 பேர் பலியாகி உள்ளனர். 22 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்