என்னை நெகிழவைத்தது அமெரிக்க மக்களின் வரவேற்பு: மோடி

By ஐஏஎன்எஸ்

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தன் மனதை நெகிழவைத்ததாக தெரிவித்தார்.

5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க்கின் மேடிசானில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கும் மோடியை பார்க்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, "நியூயார்க் மக்களின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் அளிக்கும் ஆதரவு என் மனதை நெகிழவைத்தது. இந்த பயணம் சிறப்பானதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இன்று காலை அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனரும் புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைக்காக நோபல் பரிசு பெற்றவருமான ஹரால்ட் வரும்ஸை சந்தித்து, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் எதிர்ப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்