சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட புதிய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, "சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டிலுள்ள கிழக்கு கவுடாவில் அரசுப் படைகள் ஞாயிற்று கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலியாகினர்,இதில் 11 பேர் குழந்தைகள்" என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக அரசுப் படை நடத்திய தாக்குதல்களில் 674 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago