சிரியா போர்; வரலாற்றின் தவறான பக்கத்தில் ரஷ்யா: அமெரிக்கா

By கார்டியன்

வரலாற்றின் தவறான பக்கத்தில் ரஷ்யா இருக்கிறது என்று சிரியாவில் நடக்கும் போர் குறித்து அமெரிக்கா கூறியுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.

தற்போது கிளர்ச்சியாளர்கள் கடைசிவசம் உள்ள கிழக்கு கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

இந்த நிலையில் சிரிய அரசு வான்வழித் தாக்குதலில் குளோரின் வாயுவை பயப்படுத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டியிருந்தது.

இது குறித்து அமெரிக்கா தரப்பில், "சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம் சிரிய போரில் ரஷ்யா வரலாற்றின் தவறான பக்கத்தில் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

ரசாயன தாக்குதலுக்கான ஆயுதங்களை வடகொரியாதான் சிரியாவுக்கு வழங்கியதாக  ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்