சிரியாவில் வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 19 பேர் பலி

By ஏஎஃப்பி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு தரப்பில், "கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுட்டாவில் இன்று (வியாழக்கிழமை) அரசுப் படை தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வான்வழித் தாக்குத்தலை ரஷ்யாதான் நடத்தியுள்ளது என்று லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கண்காணிப்பு அமைப்பு கூறிய குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் கவுட்டாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அரசுப் படைகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்யும் வகையில் கிளர்ச்சியாளர்களின் ஒரு தரப்பும் கவுட்டாவிலிருந்து வெளியேற ஒப்புக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்