ஆஸ்திரேலிய டாலர் நோட்டுகளில் எழுத்துப்பிழை: வருத்தம் தெரிவித்த ஒருரிசர்வ் வங்கி

By ஏஎன்ஐ

ஆஸ்திரேலியாவில் புதிதாக அச்சிடப்பட்ட 50 டாலர் நோட்டுகளில் அச்சுப்பிழை இருப்பதை அந்நாட்டு ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. மேலும், தவறுக்காக வருத்தமும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ட்ரிபிள் எம் என்ற தனியார் வானொலி நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சுப்பிழையைச் சுட்டிக்காட்டி பதிவிடவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த நோட்டின் ஒரு பக்கத்தில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான எடித் கோவானின் முதல் உரை சிறிய எழுத்துகளில் இடம் பெற்றுள்ளது. இதில் பொறுப்புணர்வு என்பதற்கான ஆங்கில வார்த்தை ‘responsibility’ என்பதற்குப் பதிலாக பிழையுடன் responsibilty என அச்சிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டப்பட்ட நோட்டுகளிலேயே இந்தத் தவறு இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, ''இந்த அச்சுப்பிழை அடுத்து அடிக்கப்படும் நோட்டுகளில் திருத்தப்படும். இப்போதைக்கு புழக்கத்திலுள்ள பெருமளவிலான டாலர்களை திரும்பப்பெறும் திட்டமில்லை'' எனக் கூறியுள்ளது.

2017 -18 காலகட்டத்தில் மட்டும் 184 மில்லியன் புதிய 50 டாலர் நோட்டுகள் அச்சிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்