வங்கதேசத்தில் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் 84 பேரின் ஆபத்தான மலேசியப் படகுப் பயணம் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெகுவாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
வங்க தேசத்தின் உலகிலேயே மிகப்பெரிய அகதி குடியேற்றம் அமைந்துள்ள இடம் குட்டுபலாங். இங்குள்ள அகதிகள் முகாமிலிருந்து 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உள்ளிட்ட 67 ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஒரு மீன்பிடி படகில் ஏறி புறப்பட காத்திருந்தபோது தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வங்காள விரிகுடாவில் உள்ள வங்கதேசத்தின் ஒரு சிறிய தீவான செயின்ட் மார்ட்டின்ஸ் வழியே தப்பிச்செல்ல இருந்த 17 ரோஹிங்கிய முஸ்லிம்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 வங்கதேச கடத்தல்காரர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களும் ஆபத்தான மீன்படகுப் பயணத்தின்மூலம் மலேசியா செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்களுக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவல் அடிப்படையில் இவ்விரு ஆபத்தான படகுப் பயணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டதாக பிராந்திய கடலோர பாதுகாப்பு தளபதியான ஃபாயேசூல் இஸ்லாம் மண்டோல், தெரிவித்தார்.
2017 ஆகஸ்ட் மாதம் பலவந்தமான ராணுவ நடவடிக்கை காரணமாக சுமார் 740,000 முஸ்லீம் சிறுபான்மையினர் ரோஹிங்கியாக்கள் மியான்மர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
வங்கதேசத்தின் காக்ஸின் பஜார் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய முகாம்களில் வன்முறைகள் பெருகியதைத் தொடர்ந்து ஏற்கெனவே 3 லட்சம் பேர் வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் முகாம்களில் இருந்து அகதிகளாக ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறந்த வாய்ப்புகளை பெறுவதற்காக அங்கிருந்து வெளியேற முயற்சிகள் செய்துவருகிறார்கள்.
அலைப்பெருக்கத்தின்ஊடே ஆபத்தான பயணம்
இதுகுறித்து மனிதக் கடத்தல்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சிறப்பு நிபுணர் ஜிஷ்ஷூ பருவா ஏஎப்பியிடம் தெரிவிக்கையில்,
ஆபத்தான படகுப் பயணங்களில் உயிரை பணயம் வைத்தாவது தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் இத்தகைய வாழ்க்கை பல சர்வதேச மனித கடத்தல் கும்பல்களுக்கு இரையாகிவிடுகிறது.
அதேநேரம் பருவமழைக்கு முன் அதாவது மார்ச் மாதத்திற்கு முன்பு கடல் அமைதியாக இருக்கும் போதுதான் பயண முயற்சிகள் செய்வது வழக்கம். ஆனால் கடத்தல்காரர்கள் அகதிகளுக்கு ஆசைகாட்டி கடலில் அலைப்பெருக்கங்கள் மிகவும் மோசமாக இருக்கும்போதுகூட அழைத்துச்செல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago