அமெரிக்கப் பத்திரிகையாளர் உட்பட மூன்று பேரைக் கொல்லும் ஐ.எஸ். அமைப்பின் வீடியோக் களில் உள்ள தீவிரவாதி அடையாளம் காணப்பட்டிருப்பதாக அமெரிக்க காவல்துறையான எஃப்.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து எஃப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியதாவது:
அமெரிக்கப் பத்திரிகையாளர் கள் ஜேம்ஸ் ஃபாலி, ஸ்டீவன் ஸாட்லாஃப் மற்றும் பிரிட்டன் நாட்டின் மீட்புப் பணியாளர் டேவிட் ஹெயின்ஸ் ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்படு வதை அந்த அமைப்பு வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பியது. இந்த வீடியோக்களில் முகமூடி அணிந்துகொண்டு, கருப்பு நிற உடையில், கையில் கத்தியுடன் உள்ள தீவிரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளான்.
அந்தத் தீவிரவாதி தென்பகுதி பிராந்திய ஆங்கில உச்சரிப்புடன் பேசுகிறான். அவன் இடது கையை அதிகமாகப் பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும். வீடியோக் களைக் கூர்மையாக ஆராய்ந்ததில் அவனுடைய சராசரி உயரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அந்தத் தீவிரவாதி அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவனுடைய பெயரையோ அல்லது நாட்டையோ குறிப்பிட ஜேம்ஸ் கோமி மறுத்து விட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago