மற்றவர்களுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த மாணவன் - வடக்கு கரோலினா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸார் உருக்கம்

By ஏஎஃப்பி

அமெரிக்காவின், வடக்கு கரோலினாவின் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தன் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்றிய மாணவன் குறித்து சார்லோட்-மெக்லென்பர்க் போலீஸ் அதிகாரி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்காவின், வடக்கு கரோலினாவின் சார்லோட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர், மூவரின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து சார்லோட்-மெக்லென்பர்க் நகர தலைமை காவல் அதிகாரி கெர் புட்னி தெரிவித்ததாவது:

அதிகாரிகள் இன்னும் வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தில் இளங்கலை மாணவன் ரேலி ஹோவெலும் மற்றொரு மாணவனும் கொல்லப்பட்டனர். ஹோவல் வடக்கு கரோலினாவில் உள்ள வேநெஸ்வில்லி கல்விக்கூடத்தில் சுற்றுச்சூழலைப் பிரதானப் படிப்பாக எடுத்துப் படித்துவந்தவர்.

இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய டெர்ரல் (22) என்ற முன்னாள் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடம்பில் நான்கு இடங்களில் காயங்கள் இருந்தன.

இச்சம்பவத்தில் உயிர்த்தியாகம் செய்த ஹோவலின் தந்தையிடம் பேசினேன், 'தாக்குதல் நடத்தியவரிடமிருந்து மற்றவர்களை காப்பாற்ற போராடிய தங்கள் மகனின் செயல் துணிச்சல் மிக்கது. அவருடைய செயல் சுயநலமற்ற வீரதீரம்மிக்க தியாகம் ஆகும் என்று பாராட்டினேன்.

அதே நேரம் அவரிடம் தனிப்படட முறையில் மற்றவர்களுக்காக உயிர் துறந்த ஒருவரின் தந்தையிடம் பேச அந்த நேரத்தில் பேச வார்த்தைகள் இன்றி தவித்தேன்.

நான் அவருக்கு சொன்னது இதுதான். நாங்கள் இப்பணிக்கு கடமைப்பட்டவர்கள். இச்சம்பவத்தின் தொடக்கப்புள்ளிவரை சென்று நாங்கள் செல்வோம். இச்சம்பவம்

ஏன் நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிக்கத்தான் போகிறோம் என்று உறுதியளித்தேன்.

பிறகு இச்சம்பவம் பற்றி ஹோவலின் தந்தையிடம் விவரித்தேன்.

அவர்களை நாங்கள் நெருங்கிச் சென்றோம். இந்தமாதிரி நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று மக்களுக்கு நாம் பயிற்சி அளித்துள்ளோமோ அதை மிகவும் சரியாக அவர் செய்தார்.

தாக்குதல் நடத்த வருபவரிடமிருந்து முதலில் தப்பிக்கவேண்டும். மறைவதையே கேடயமாக்கி பின்னர் அவரைத் தாக்க முற்பட வேண்டும்.

இதைத்தான் அவர் மிகச் சிறப்பாக செய்தார். ஆனால் அவருக்கு ஓடி ஒளிய இடமில்லை. வெளிப்படையாக ஆனால் லாவகமாக தப்பித்து எதிராளியைத் தாக்கினார். துரதிஷ்டவசமாக தாக்குதலின்போது கண்ணெதிரே அவரது கால் துண்டிக்கப்பட்டது. 

சற்று நேரத்தில் அவர் உயிரை விட நேர்ந்தது. அவர் செய்த தந்திரங்களுக்கு நிச்சயம் அவர் உயிர் போயிருக்க வேண்டியதில்லை. இந்த நடவடிக்கைகளில் திடீரென்று அங்கே வந்த எங்கள் உயிரையும் அவர் சேர்த்து காப்பாற்றினார் என்பதுதான் நிஜம். எனினும் எங்களுக்கதாக அவர் தன்உயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது மிகமிக வருத்தமாக உள்ளது.

இவ்வாறு காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

இதில் கொல்லப்பட்ட இன்னொரு மாணவரின் உடல் அடையாளங் காணப்பட்டுள்ளது. அவர் பெயர் எல்லிஸ் பார்லியர், 19 வயது வடக்கு கரோலினாவின் மிட்லாண்டில் கணினிப்பிரிவு மாணவர். இத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதில் ஒருவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ராமி அல்-ரமதான் பொறியியல் மாணவர்.

இக்கொலை சம்பவத்தை நடத்திய, டெர்ரல் இச்சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டபின் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, என்ன நடந்தது என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேட்டார். ''அவங்க வகுப்பறையிலேயே போய் சும்மா ஜஸ்ட் சுட்டுக்கொல்லணும்னு தோணிச்சி.'' என்று பதில் தெரிவித்ததார்.

பொதுமக்கள் புழங்கும் இடங்களில் துப்பாக்கிச்சூடு என்பது அமெரிக்காவில் சர்வசாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் கலிஃபோர்னியாவில் போவே பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர்.

2017ல் மட்டுமே அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 40 ஆயிரம் கொல்லப்பட்டதாக அரசாங்கத்தின் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவர்களில் மூன்றில் இரண்டுபங்குபேர் தற்கொலைகளில் இறந்துள்ளனர். கடந்த ஐம்பதாண்டுகளில் இதுவே மிகப்பெரிய எண்ணிக்கை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

42 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்