இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு தொடங்க இருந்த நிலையில் அதனை சீர்குலைக்கும் விதமாக, காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் அந்நாட்டு அதிகாரிகள் சந்திப்பு மேற்கொண்டதாக சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டம் துவங்கியதும், பாகிஸ்தானுக்கான தூதர் சர்தஜ் அசீஸ், ஆகஸ்ட் 25-ஆம் தேதி எல்லைப் பிரச்சினை குறித்து மெற்கொள்ள இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததாக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, பாகிஸ்தானுடன் கொண்டுள்ள பிரச்சினையை தீர்க்கும் விதமாக வாய்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அதனை முறியடிக்கும் விதமாக, காஷ்மீர் பிரிவினைவாதிகளை அந்நாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தை நடக்க இருந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஐந்து நாட்கள் முன்னர் பிரிவினைவாதிகளுடன் சந்திப்பு நடத்த பாகிஸ்தானுக்கு அவசியம் என்ன?
ஓவ்வொரு முறையும் இந்தியாவே பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி வருகிறது. சுமுக உறவு ஏற்படவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்களின் முயற்சிக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், தொடர் கொடி அமர்வு முடிவுகளையும் மீறி துரோகம் செய்யும் விதமாக அத்துமீறி எங்கள் மக்களை அவர்களது ராணுவம் கொன்றுள்ளது. இந்த செயல்பாடுகள் எங்களுக்கு தொடர் அதிருப்தியை மட்டுமே ஏற்படுத்துகிறது. பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதற்கு இதுவே காரணம். உள்நோக்கம் ஏதும் இல்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago