உலகின் மிகப்பெரிய விமானம்: கலிபோர்னியா பாலைவனத்தில் முதல் சோதனை ஓட்டம்

By ஏஎஃப்பி

உலகின் மிகப்பெரிய விமானமான ஸ்ட்ராடோலாஞ்ச் மெகா ஜெட் விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் கலிபோர்னியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

''மிக பிரம்மாண்டமான இரண்டு விமான உடற்பகுதிகளைக் கொண்ட ஸ்ட்ராடோலாஞ்ச் விமானத்தில் ஆறு போயிங் 747 ரக இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ராடோலாஞ்ச் மெகா ஜெட் தனது முதல் பயணத்தை நேற்று மாலை மோஜவா பாலைவனத்தில் தொடங்கியது.

இவ்விமானம் விண்வெளியில் செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாழ்வான உயரத்திலும் பறக்கும். வானில் செயற்கைக்கோள்களை நிரல்படுத்துவதற்கும் இவ்விமானம் பயன்படும் தொழில்நுட்பத்தை உள்ளீடாகக் கொண்டுள்ளது.

செயற்கைக்கோள்களை வரிசைப்படுத்துவதற்கான ஒரு நெகிழ்வான வழியையும், அதைவிட ராக்கெட்டுகளை செங்குத்தாக வானில் செலுத்தவும் தேவைக்கேற்ப நீண்ட பயணத்திற்கும் இவ்விமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்விதமாக ஒருவகையில் பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கிய விமானமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கால்பந்து மைதானத்தைவிட பெரிய காற்று விசிறிகள்

காற்று விசிறியை விட விமானம் மிகப்பெரியது. அதாவது ஒரு கால்பந்து மைதானத்தைவிட பெரியது. ஒரு ஏர்பஸ் ஏ380 எனும் மிகப்பெரிய ரகத்தைவிட 1.5 மடங்கு பெரிய விமானம் இது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் இவ்விமானத்தின் காற்று விசிறி 117 மீட்டர் நீளமுடையதாகும். இதை ஒப்பிடும்போது ஏர்பஸ் விமான காற்று விசிறி 80 மீட்டர்தான்.

இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 304 கிலோ மீட்டர் ஆகும். 17,000 அடி, அல்லது 5,182 மீட்டர் உயரத்தில் பறக்கும். 

இரண்டரை மணி நேரம் பறந்தது

அமெரிக்கன் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்கேல்டு காம்போசைட்ஸ் இவ்விமானத்தை வடிவமைத்துள்ளது.

இவ்விமானம் நேற்று (சனிக்கிழமை) சுமார் இரண்டரை மணி நேரம் வானில் பறந்து சென்றது. அதற்கு முன்புவரை வரை, தரையில்தான் சோதனைகள் நடத்தப்பட்டிருந்ததாக ஸ்ட்ராட்டோலாஞ்ச் தெரிவிக்கிறது.

இதுகுறித்து பேசிய, ஸ்ட்ராடோலாஞ்ச் நிறுவன சிஇஓ ஜீன் ஃப்ளாய்ட், ''தரைமட்டப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளுக்கு ஒரு நெகிழ்வான மாற்றீடு விமானத்தை எங்கள் பணிக்குழு வழங்கியுள்ளது. என்ன ஒரு அற்புதமான முதல் விமானம்'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பால் ஆலென் முயற்சி

ஸ்ட்ராடோலாஞ்ச் நிறுவனத்திற்கு இவ்விமானத்தைத் தயாரிக்க மைக்ரோசாப்டின் இணை நிறுவனர்  பால் ஆலென் ஸ்பான்சர் வழங்கியுள்ளார். சிறியவகை செயற்கைக்கோள்களை தொடங்குவதற்கு சந்தையில் நுழைவதற்கான ஒரு முயற்சியாக இதைப் பயன்படுத்தும் நோக்கத்தில் இதில் ஈடுபட்டார்.

எனினும், பால் ஆலென் கடந்த ஆண்டு அக்டோபரில் இறந்துவிட்டார். எனவே செயற்கைக்கோள் தொடங்கும் முயற்சி கேள்விக்குறிதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

37 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்