ஈரானில் பெய்துவரும் கடும் மழையினால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்த 'ஈரானா' செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:
வெப்பமயமாதலால் ஏற்படும் திடீர் பருவநிலை மாறுபாடுகளால் தற்போது ஈரானில் கடும் மழை பெய்துவருவதாக ஈரான் அரசு தெரிவிக்கிறது.
கடந்த 19 நாட்களாக அங்குபெய்துவரும் மழையினால் இதுவரை 791 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எமர்ஜென்ஸி மெடிக்கல் சர்வீஸஸ் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.
மார்ச் 19க்கு முன்னதாக ஈரானின் வடகிழக்கு பகுதியில் தொடங்கிய மழை பாதிப்பு மார்ச் 25க்கு பின்னர் மேற்கு, தென்கிழக்கு என பரவத் தொடங்கியது. ஏப்ரல் 1லிருந்து தென்கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் நாடு முழுவதும் 15 மாகாணங்களில் 2,199 கிராமச் சாலைகளும் 84 பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 141 ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 400க்கும் அதிகமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளின் செய்தித் தொடர்பாளர் பெஹ்னம் சாயீடி தெரிவித்தார்.
வெள்ளத்தினால் 12 ஆயிரம் கி.மீ. தொலைவு சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் நாட்டின் 36 சதவீத தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளதாக ஈரானிய ஊரக அமைச்சர் அப்துல்ரேஸா ரெஹ்மானி ஃபாஸ்லி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago