பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் சவுதியின் சர்ச்சை செயலி: நீக்க கூகுள் மறுப்பு

By ஏஎன்ஐ

ஆப்ஷெர் என்ற சர்ச்சைகுரிய செயலியை தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது. 

ஆப்ஷெர் என்ற செயலி, சவுதி அரேபியாவில் இருக்கும் ஆண்கள், பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவுகிறது. இந்த செயலி பற்றிய புகார்களைத் தொடர்ந்து அதை விசாரித்த கூகுள், ஒப்பந்தங்களை எந்தவிதத்திலு இந்த செயலி மீறவில்லை என்பதால், அதை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க முடியாது என தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களும் இந்த செயலியை நீக்க வேண்டும் என நிர்பந்தித்திருந்தனர். இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஆப்ஷெர் செயலியை ஆராய்ந்து வருகிறது.  ஆனால் இன்னமும் ஆப்பிளின் செயலிகள் ஸ்டோரிலிருந்து ஆப்ஷெரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகுள் மற்றும் ஆப்பிளின் செயல்பாடுகளும், பதில்களும் அதிருப்தி அளிப்பதாக அமெரிக்க கீழவை பிரதிநிதி ஜாக்கி ஸ்பையர் தெரிவித்துள்ளார். ஆப்ஷெரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். 

சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஆப்ஷெர், அடக்குமுறைக்கான செயலியாக செயல்படுவதாக பல பெண்கள் உரிமை அமைப்புகளின் விமர்சனங்களை சந்தித்துள்ளது. முதன்மையாக இந்த செயலி, சவுதி குடிமகன்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின், புலம் பெயர்ந்து வேலை செய்பவர்களின் நடவடிக்கைகளையும் அவர்கள் பாஸ்போர்ட் தகவல்களை வைத்து கண்காணிக்க உதவுகிறது. 

அவர்கள் எங்கு பயணப்படுகிறார்கள், எவ்வளவு நேரப் பயணம் உள்ளிட்ட தகவல்களுடன் அவர்கள் எங்கு செல்ல வேண்டும், செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்