சமூக ஊடகத்தில் நபிகளைப் பற்றி அவதூறாகப் பதிவிட்ட மலேசியருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மலேசியா உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மலேசியாவில் இதுபோன்ற தண்டனை வரலாற்றிலேயே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐஜிபி மொகமது ஃபுசி ஹருன் கூறும்போது, ''சமூக வலைதளங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நபிகளை அவமதித்த வழக்கில் மலேசியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றத்துக்கு ஓராண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரிங்கிட்டுகள் (சுமார் ரூ.8.56 லட்சம்) அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். முதலாவதாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு நபருக்கு திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்தப்படும். மற்ற இருவர் மீதான குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
தகவல் தொடர்பு வட்டங்களைத் தவறாகக் கையாளுதல், இன ரீதியான நல்லிணக்கத்தைக் குலைத்தல், வன்முறையைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மத ரீதியான பதிவுகளை இட்டோ, பகிர்ந்தோ நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக வியாழக்கிழமை அன்று மத விவகாரங்கள் துறை அமைச்சர் (பொறுப்பு) முஜாஹித் யூசுஃப் ரவா, இஸ்லாமையும் நபிகளையும் அவமதிக்கும் எழுத்துகளைக் கண்காணிக்க இஸ்லாமிய விவகாரங்கள் துறை சார்பில் தனிப்பிரிவை நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago