எகிப்தைச் சேர்ந்த யுனெஸ்கோ விருதுபெற்ற பத்திரிகையாளர் ஷாகான் என்று அறியப்பட்ட முகம்மது அபு சையது ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
எகிப்து அதிபர் மொகமது மோர்ஸி பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் 2013ல் அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படைகள் கிளர்ச்சியை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளை படம்பிடித்தவர்தான் இந்த ஷாகான் (31).
மிகப்பெரிய விசாரணை
ஷாகான் 739 பிரதிவாதிகளுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர்களில் பெரும்பாலோர் போலீஸாரைக் கொன்றது மற்றும் பொதுச் சொத்துக்களை அழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர். 2011 எகிப்தில் எழுச்சிக்குப் பிறகு இது மிகப்பெரிய எண்ணிக்கையில் சாட்சியங்களை விசாரிக்கும் நீதிமன்ற விசாரணையாக அது அமைந்தது.
ஷாகான் "கொலை மற்றும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் மற்றும் " என்று குற்றம் சாட்டப்பட்டார். மரண தண்டனையை அவர் சுமத்தியக் குற்றங்களுக்காக சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் தெரிவித்தன. அவரை விடுதலை செய்யவேண்டும் என கோரின.
சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகள்
குறிப்பாக, சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனல், ஷாகானுக்கு தண்டனை அளிக்கப்பட்டபோது, போலீஸாரின் மிருகத்தனமான தடியடி துப்பாக்கிச் சூடு பிரயோகத்தை வெறுமனே படம் பிடித்ததுதான் அவர் செய்தது அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று கேட்டது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க மனித உரிமை கண்காணிப்பகத்தின் தலைவர் சாரா லீக் விட்ஸன் இதுகுறித்து தெரிவிக்கையில், ''2013ல் ஷாகான் கைது செய்யப்பட்டதிலிருந்து எகிப்து இருளுக்குள் தள்ளப்பட்டுவிட்டது. மேலும் ஊடக சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ விருது
அவர் "பயங்கரவாத மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வேளையில் கடந்த ஆண்டு யுனெஸ்கோ ஷாகானின் துணிவு, கருத்து சுதந்திரத்திற்கான துணிவு, எதிர்ப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக ''2018 உலக சுதந்திர விருது'' வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
2013ல் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான புகைப்பட பத்திரிகையாளர் கிஸா நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
நீண்டகாலத்திற்குப் பிறகு தனது பெற்றோரை முதன்முதலாக சந்தித்தபோது ''நான் பறக்கத் தொடங்கியுள்ளேன்'' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எனினும் அவர் இன்னும் ஐந்து ஆண்டுக்கு காவல்துறையின் கடுமையான கண்காணிப்பை எதிர்கொள்ள வேண்டும். மற்றும் அக்காலக்கட்டங்களில் இரவில் உள்ளூர் காவல் நிலையத்தில் சென்றுதான் உறங்க வேண்டும், என்று அவருக்கான விடுதலை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் மனித உரிமைக் கழகம், ஷாகானின் விடுதலையை வரவேற்றுள்ளது.
ஹோஸ்னி முபாரக் வரவேற்பு
எகிப்தின் நீண்டகால அதிபராக பதவி வகித்த (1981-2011) ஹோஸ்னி முபாரக் கூறுகையில்,''நாம் மகிழ்ச்சியுடன் அவரது விடுதலையைக் கொண்டாடும்
இத்தருணத்தில், 2011ல் எவ்வளவு தூரம் எகிப்து வீழ்ச்சியைடைந்தது என்பதும் நம் நினைவுக்கு வருகிறது. எனினும் ஜனநாயகம் விழித்துக்கொண்டது சற்றே நம்பிக்கையைத் தந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு, ''இந்தப் புகைப்பட பத்திரிகையாளருக்கு கட்டுப்பாடுகள் விதித்து விடுதலை செய்திருப்பது மிகவும் அவமானகரமானது.
எகிப்திய அதிகாரிகள் இந் நிபந்தனைகளை உடனடியாக நீக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஷாகானின் தாயார் 61 வயது ரேடா மாஹ்ரவுஸ் தனது மகனைப் பற்றி கூறுகையில், எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் பேசாமல் வீட்டிலேயே இரு என்றால் கேட்கமாட்டேன் என்கிறான். பத்திரிகை என் ரத்தத்தில் ஊறியது என்று சொல்கிறான்.'' என்றார்.
ஷாகான் பேட்டி
அப்போது ஷாகான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
''ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை என்னால் மறக்கமுடியாது. அரசாங்கமும் காவல்துறையும் என்னைக் கட்டுப்படுத்தினாலும் மீண்டும் எகிப்தில் ஒரு புகைப்பட பத்திரிகையாளனாகவே என் பணியைத் தொடர்வேன்.
எனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்கும்படி நான் நீதித்துறையின் உதவியை நாடுவேன்.
2013ல், போராட்டம் தொடங்கிய 30 40 நிமிடங்களிலேயே நாங்கள் கைது செய்யப்பட்டோம். எங்களது உபகரணங்கள் எங்களிடமிருந்து பறித்தனர். மற்றவர்கள் இரண்டு மணிநேரங்களில் கைது செய்யப்பட்டனர்.
ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக்கு வராமல் இருந்த நான் வீடு திரும்பியதும் வீட்டு பால்கனியிலிருந்து முதல்வேளையாக புகைப்படங்களை எடுத்தேன்.
இவ்வாறு ஷாகான் தெரிவித்தார்.
ஷாகானுடன் ஐந்து ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 215 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் எகிப்து சிறைகளில் முப்பதுக்கும் மேற்ப்பட்ட முக்கிய ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்படாத நிலையே இன்னும் தொடர்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago