பாகிஸ்தானில் தாக்குதல் 4 பேர் பலி

By பிடிஐ

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படை வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் ஒரு குழந்தைஉட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 24பேர் காயம் அடைந்தனர். பெஷாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சத்தர் சாலையில் எல்லை பாதுகாப்புப்படையினரின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றபோது கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பிரிகேடியர் காலித் ஜாவித்தை கொல்லும் நோக்கில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அவர் தப்பிவிட்டார் என சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட நகர போலீஸ் அதிகாரி கூறினார்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த காரும் சாலையோரம் இருந்த கட்டிடங்களும்சேதம் அடைந்தன. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. வடக்கு வஜிரிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு பழி தீர்க்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்