பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. மாநாட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செப்டம்பர் 27-ம் தேதி ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்று மோடி பேச இருக்கிறார். அதற்கு முன்னதாக செப்டம்பர் 23-ல் பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐநா மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 120 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும் இதில் மோடி பங்கேற்கும் திட்டம் இல்லை.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பான் கி-மூனிடம் உலகின் பெரிய நாடுகளான சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பங்கேற்க திட்டமிடாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இந்திய பிரதமர் மோடி கூட பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பங்குபெற முடியாத நிலை உள்ளது. அவர் பங்கேற்க வேண்டுமென்று நான் உண்மையாகவே விரும்புகிறேன் என்றார்.
இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago