மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் உறைகுளிரில், மையிருட்டில் நியூயார்க் சிறையில் வாடிய கைதிகள்

By ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவில் புரூக்ளின் சிறையில் மின்சாரம் இல்லாமல் நாட்கணக்கில் மைனஸ் 18 டிகிரி உறைகுளிரில் நடுநடுங்கி உயிருக்குப் போராடிய கைதிகள் விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

 

இதனையடுத்து அங்கு ஆர்பாட்டம் வெடித்துள்ளது, உடனடியாக நடவடிக்கை தேவை என்ற கோஷங்கள் எழுந்துள்ளன.

 

புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் சிறையில் கடந்த வாரம் நடந்த தீப்பிடிப்புச் சம்பவத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் குளிரில் வழக்கமாக உஷ்ணப்படுத்தும் கருவிகளை இயக்க முடியாமல் போயுள்ளது. ஆர்க்டிக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையினால் பனிக்காற்று அமெரிக்காவிற்குள் வந்த படியே இருந்து வருகிறது.

 

இந்நிலையில் சுமார் 1,600க்கும் மேற்பட்ட கைதிகள் இருட்டிலும் கடும் குளிரிலும் நாட்கணக்கில் சிறை செல்களில் வாடிய விவகாரம் நீதிமன்ற வழக்காகப் பதிவாகியுள்ளது. 23 மணி நேரம் செல்லிலேயே மையிருட்டிலும் குளிரிலும் கைதிகள் சொல்லொணா கொடுமையை அனுபவித்துள்ளனர்.

 

கைதிகளின் இந்த நிலையைக் கண்டு மனிதாபிமானமே இல்லாத சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளாது இருந்துள்ளனர். கைதிகளில் பலர் ஆஸ்துமா நோயாளிகள் என்பதால் இருட்டில் அவர்கள் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட்ட நிலை இருந்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் நைடியா வெலாஸ்க்வேஸ் சனிக்கிழமையன்று சிறையைப் பார்க்கச் சென்றார், சென்று வந்த பிறகு சிறைகள் கழகம் கைதிகளின் உரிமைகளுக்குப் பராமுகமாக இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து வழக்கறிஞர்கள் சிலரும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சிலரும் விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்