சில பிஷப்புகளும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர்- போப் பிரான்சிஸ் ஒப்புதல்

By ஏஎஃப்பி

சில பிஷப்புகளும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது உண்மைதான் என போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பி வரும்போது விமானத்தில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போப், ''சில பாதிரியார்களும் பிஷப்புகளும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.

2018-ல், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தப் பிரச்சினை பெரிதானது.

இதுகுறித்துப் பேசிய போப், ''இந்தப் பிரச்சினை எல்லா இடத்திலும் இடக்கிறது. ஆனால் சில பகுதிகளில் உள்ள சில திருச்சபைகளில் அதிகமாக இருக்கிறது.

பாலியல் புகார்களால் வாடிகன் ஏராளமான பாதிரியார்களை இடைநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய வாடிகன்  நீண்ட நாட்களாகப் பணியாற்றி வருகிறது.

வாடிகன் இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளவில்லை என்று மற்றவர்கள் கூறுவதை நான் விரும்பவில்லை. அதில் உண்மையில்லை. இதில் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது மட்டும் உண்மை. அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்'' என்றார் போப் பிரான்சிஸ்.

வாடிகனின் பெண்கள் பத்திரிகையான 'விமன் சர்ச் வோர்ல்ட்' பத்திரிகையின் பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை, ''பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தில் கன்னியாஸ்திரிகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து வாய் திறப்பதில்லை'' என்று குற்றம் சாட்டியது. 1990களிலேயே ஆப்பிரிக்காவில் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் வன்முறைகள் இழைத்தது குறித்த செய்திகள் வாடிகனுக்குக் கிடைத்ததாகவும் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் ஆசிரியர் லூசெட்டா ஸ்காராஃபியா, ''இனியும் இந்த விவகாரத்தில் வாடிகன், தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்தால், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் கன்னியாஸ்திரிகள் கருக்கலைப்பு செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவர். தந்தை பெயர் தெரியாமலேயே குழந்தைகள் வளரும் நிலை நீடிக்கும். பெண்களுக்கு எதிரான வாடிகனின் ஒடுக்குமுறை எப்போதும் மாறாது'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்