போகோ ஹராம் தலைவர் கொல்லப்பட்டார்: நைஜீரிய ராணுவம்

By ஐஏஎன்எஸ்

நைஜீரியப் படைகள் நடத்தியத் தாக்குதலில் போகோ ஹராம் தலைவர் என்று கருதக்கூடிய முகமது பஷீர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தின் கொடுங்கா எனும் இடத்தில், புதன்கிழமை இரவு போகோ ஹராம் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த இயக்கத்தின் தலைவரான முகமது பஷீர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரிய அரசுக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக அச்சுறுத்தலாக போகோ ஹராம் அமைப்பு இருந்து வருகிறது.

இஸ்லாமிய கட்டளைகளை பின்பற்றும் அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கிருக்கும் மக்கள் மீது அந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வந்தது. கொல்லப்பட்ட முகமது பஷீர் போகோ ஹராமின் பல்வேறு மிரட்டல் வீடியோக்களில் தோன்றி இருந்தவர் ஆவார்.

அந்த இயக்கத்தின் தலைவர் முகமது பஷீர் கொல்லப்பட்டதை அடுத்து அந்த இயகத்தின் முக்கிய தலைவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் உட்பட 260-க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்