இரண்டாம் உலகப்போரில் லட்சக்கணக்கானவர்களை கொன்றுகுவித்த நாஸிப்படையின் சின்னத்தை அணிந்து பாப் பாடல்கள் பாடிய இசைக்குழுவிற்கு இஸ்ரேல் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் பிரபல இசைக்குழு ''ஆல் கேர்ள் பேன்ட்'' தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறது. இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த இசைநிகழ்ச்சியில் பிரபல பாடகி பிச்சையப்பா நாம்சாய் நாதா ஹிட்லரின் சின்னமான ஸ்வஸ்திக் பொறித்த டீஷர்ட்டை அணிந்து பாடல்களைப் பாடினார். இது பலரையும் வியப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியது.
பாங்காக்கில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் துணைத் தூதர் ஸ்மாதர் ஷாப்பிரா தனது ட்விட்டர் பதிவில் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
''பொது இடங்களில் பலரும் பார்க்கும்விதமாக ஹிட்லர் படங்கள், ஸ்வஸ்திக் சின்னங்கள் மற்றும் நாசிப்படையின் இதர முத்திரைகள் அச்சிடப்பட்ட டீஷர்ட்களை அணிந்துகொண்டு வலம்வருவது என்பது உலக வரலாற்றைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.
முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச இனப்படுகொலை தினம் அனுசரிக்கப்படும்நிலையில் இச்செயல் மிகவும் வருத்தத்தையும் அச்சத்தையும் தருகிறது.
இந்த இசைக்குழுவின் பாடகி அணிந்திருந்த டீஷர்ட் நாஜி அடையாளங்கள் உலகெங்கிலும் நாஸி படைகளினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களான மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளைத் துன்புறுத்தியது.
இவ்வாறு இஸ்ரேலிய துணைத்தூதர், நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட தனது ட்வீட்டர் கண்டனப் பதிவில் தெரிவித்துள்ளார்.
music-band-003jpgநேற்று நடந்த இசைநிகழ்ச்சியில் மன்னிப்பு கோரியதாய்லாந்து பாடகி100
மன்னிப்பு கோரிய பாடகி
இதற்கிடையில் நேற்று ஒளிபரப்பான இசைநிகழ்ச்சியில் தொடக்கத்திலேயே தனது செயலுக்காக பாடகி மன்னிப்பு கோரினார்.
''இது அனைவருக்கும் ஒரு உதாரணமாகிவிட்டது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்'' என்று தெரிவித்து முழந்தாளிட்டு அவர் தனது மன்னிப்பை கோரினார். அச்சமயம் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''இதை வேண்டுமென்றே நாங்கள் செய்யவில்லை. இனி இந்தமாதிரி இன்னொரு முறை நடக்காது என உறுதியளிக்கிறேன்.
தயவுசெய்து எனக்கு இது தொடர்பாக அறிவுரைகள் கூறவும். எதிர்காலத்தில் சிறந்த 'வளர்ந்த பெண்ணாக' நான் வளர அது உதவும் என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள், இசைக்குழுக்கள் பாடகிக்கு ஆதரவு
பிஎன்கே 48 இசைக்குழு ரசிகர்கள் மற்றும் ஜப்பானிய பெண்கள் இசைக்குழு ஏகேபி48 நாம்சாய்க்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதவிர அவரது ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். "எனக்கு 40 க்கும் மேலான வயது, இந்த தலைப்பைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது, டீ ஷட்டை இசைநிகழ்ச்சியில் பார்த்தபோது, அது ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று ரசிகர் பிரசித் ருதிகிரெனெக்ரா கூறினார்.
வலைதளங்களில் இதுகுறித்து கருத்துப் பதிந்துவரும் பலரும், தாய்லாந்தின் கல்வி முறைக்கு குற்றம் சாட்டினர், தாய்லாந்து கல்விமுறை உலக வரலாற்றில் அதிக கவனம் செலுத்தாததே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago