போலார் வோர்டெக்ஸ் என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் பகுதி மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு அமைப்பினால் அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவி வருகிறது, இது மிகவும் அபாயகரமான வெப்ப நிலை சரிவு என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மிட்வெஸ்ட் பகுதி இந்தக் கடும் பனிப்பொழிவு அபாயகரமான குளிருக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை ஜீரோ டிகிரிக்கும் கீழ் (-18 டிகிரி செல்சியஸ்) சென்றுள்ளது. சிகாகோவில் இரவு நேரங்களில் மைனஸ் 50 டிகிரியாக வெப்பநிலை கடும் சரிவு கண்டுள்ளது. மிட்வெஸ்ட் பகுதியில் உள்ள நகரங்களில் வெப்பமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டன, விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. சுமார் 1000 விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.
“கடும் பனிப்புயல் சிகாகோ உள்ளிட்ட மாகாணங்களில் கடும் பீதியைக் கிளப்பியுள்ளது. எங்களிடம் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்” என்று இல்லிநாய்ஸ் கவர்னர் ஜே.பி. பிரிட்ஸ்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
போலார் வோர்டெக்ஸ் பொதுவாக வடதுருவத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கும் ஆனால் இம்முறை தென்புறமாக நகர்ந்து அமெரிக்காவைத் தாக்கியுள்ளது. கடும் குளிரினால் மின்னசோட்டாவில் நபர் ஒருவர் தன் வீட்டருகே இறந்து கிடந்தார்.
வடக்கு மற்றும் மத்திய ஜார்ஜியாவில் வரும் நாட்களில் இன்னும் பனிப்பொழிவும் குளிர் காற்றும் அதிகம் இருக்கும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சி படங்களில் சிகாகோ நதி முழுதும் உறைந்து போயுள்ளது அதே போல் மிச்சிகன் ஏரி முழுதும் உறைந்து போய்விட்டது.
போலார் வோர்டெக்ஸ் அபாயகரமான எல்லைக்குச் செல்லும் என்று எச்சரிக்கும் அமெரிக்க தேசிய வானிலை சேவை வல்லுநர் ரிக்கி காஸ்ட்ரோ “இங்கு ஒரு வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.
விஸ்கான்சினில் 2 அடி பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இல்லினாய்ஸில் 6 இஞ்ச்களுக்கு பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமையும் வெப்ப நிலை -30 டிகிரி -40 டிகிரிக்குக் குறையும் என்று வானிலை கணிப்புகள் கூறுகின்றன.
இதற்கு முன்னால் சிகாகோவில் 1985ம் ஆண்டு மைனஸ் 27 டிகிரி பாரன்ஹீட் (-33 டிகிரி செல்சியஸ்) பதிவானதுதான் குறைந்தபட்ச வெப்ப நிலையாகும், அதனை தற்போது முறியடித்து விட்டது இந்த அபாய போலார் வோர்டெக்ஸ்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago