இஸ்ரேல் வான்வழியில் பறந்த சிரியா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேலுக்கு உட்பட்ட பகுதியில் பறந்த போர் விமானம் வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டது" என்று இன்று இஸ்ரேல் ராணுவம் அந்நாட்டு ஊடகம் மூலம் தெரிவித்தது.
தங்கள் நாட்டு விமானம் வீழ்த்தப்பட்டதை உறுதி செய்த சிரியா அரசு, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் என்ற எல்லைப் பகுதியில் எங்கள் நாட்டின் சுகோய் ரக விமானம் இன்று தற்செயலாகவே இஸ்ரேலின் வான்வழிக்கு சென்றது. எங்களுக்கு தாக்குதல் நடத்தும் நோக்கம் எதுவும் இல்லை.
அதிபர் ஆஸாதுக்கு எதிரான போரிடும் சிரியா பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திட அந்த போர் விமானம் சென்றது என்று சிரியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படி ஒரு தாக்குதல் 29 வருடங்களுக்கு பின்னர் நடத்தப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலாகவும் இருக்கலாம், இது அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கம் என்றும் சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள லெபனான் நாட்டில் கோலன் ஹைட்ஸ் உள்ளது. தற்போது இந்த பகுதியை இஸ்ரேல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
கடந்த 1985-ஆம் ஆண்டு லெபனான் போர் நேரத்தில் அந்த நாட்டை கண்காணித்து கொண்டிருந்த சிரியா நாட்டின் மிக்-23 ரக விமானத்தை இதே பகுதியில் இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னர் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago