காபூலில் உயர்நிலைப்பள்ளி அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

By ஏஎஃப்பி

ஆப்கான் சிறுபான்மையினரான ஹஜாரா இனக்குழுவினர் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகிலும் உயர்நிலைப்பள்ளிக்கு அருகிலும் பயங்கரத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்பு என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்ட புகைப்படத்தில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக் கிடந்தது தெரிய வந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சக உதவி செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘ஆர்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து தற்கொலை நபர் சென்று கொண்டிருந்தார், அப்போது பாதுகாப்பு முகாமில் அவரைச் சோதனை செய்தனர். அப்போதுதான் அது தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் என்பது தெரிவதற்குள் வெடித்துச் சிதற பாதுகாப்புப் படையினர்தான் பெரும்பாலும் பலியாகினர்’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் உயரதிகாரி, 15 - 16 உடல்கள் கிடந்ததாகவும் மேலும் குண்டுவெடிப்பில் சிதறிய உடல் பாகங்களும் ஆங்காங்கே கிடந்ததாகத் தெரிவித்தார்.

இஸ்திக்லால் உயர் நிலைப்பள்ளியருகே இது ஒரு மிகப்பயங்கரமான குண்டு வெடிப்பாகும் என்று நேரில் பார்த்த குவாசி நவாபி என்ற நபர் ஏ.எஃப்.பி செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, தாலிபான்களுக்கு எதிரான போராட்டம் என்பதால் தாலிபான்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இனவெறி வன்முறை:

அரசுக்கு ஆதரவான ஹஜாரா போர் வீரர்கள் மற்றும் அரசுப் படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். ஹஜாரா முஸ்லிம்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். தாலிபான்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

1996-2001-ல் நடந்த தாலிபான்களில் அடக்குமுறை ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கடும் வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்டது.

மேலும் ஹஜாரா பிரிவினரைத் தாலிபான்கள் தாக்கலாம் என்பதால் ஜக்ஹோரி, மாலிஸ்தான் ஆகிய ஊர்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் அரசு தங்களை தாலிபான்கள் மற்றும் ஐஎஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் இது பெரும்பாலும் வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்றும் ஹஜாரா ஷியா முஸ்லிம்கள் ஆவேசப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்