சிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட யு.எஸ் பத்திரிகையாளர் விடுவிப்பு

சிரியாவின் அல்- நுஸ்ரா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் தியோ குர்திஸ் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

கடந்த 2012- ஆம் ஆண்டு, அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் தியோ குர்திஸ் செய்தி சேகரிப்பதற்காக சிரியா சென்றபோது, துருக்கி அருகே அல்- நுஸ்ரா என்ற தீவிரவாத அமைப்பால் கடத்தப்பட்டார்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட பத்திரிகையாளர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோடு, பத்திரிகையாளரை விடுவிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளை அடுத்து அவர் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கெர்ரி தெரிவித்தார்.

பத்திரிகையாளர் நாடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் கடத்தப்பட்ட பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே, கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மற்றொரு கடத்தப்பட்ட பத்திரிகையாளரை விடுக்க செய்ய அமெரிக்கா அவசர நடவடிக்கைகளை எடுத்தது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்