இந்தோனேசியாவைச் சேர்ந்த, கடலில் குதித்து தேடுவதில் நிபுணரான ஸ்யாக்ருல் ஆண்ட்டோ (48), அன்று கடலுக்குள் பாய்ந்து 189 உயிர்களைப் பலிவாங்கிய இந்தோனேசிய விமான விபத்தில் தேடல் பணியில் ஈடுபடுவதற்காக கடலில் குதித்தபோது வெள்ளிக்கிழமையன்று மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“மனிதார்த்த ஹீரோ ஆண்ட்டோ மறைவுச் செய்தி பேரிழப்பு, ஆழந்த் இரங்கல்கள்” என்று பாசர்நாஸ் தலைவர் மொகமது ஸ்யாகி தெரிவித்தார்.
ஆண்ட்டோ எப்படி மரணமடைந்தார் என்பது பற்றிய விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. அவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம், உடனடியாக புதைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
அன்று கடலில் விழுந்த இந்தோனேசிய விமான விபத்தில் பலியான 189 பேர், விமானத்தின் உதிரிபாகங்கள் இரண்டாவது கறுப்புப் பெட்டி ஆகியவற்றைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.
ஏகப்பட்ட கடல் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட சாதனை நாயகரான ஆண்ட்டோ, 2014-ல் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா ஜெட் விமானத் தேடுதல் பணியிலும் குறிப்பிடத்தகுத பணியாற்றியவர் ஆண்ட்டோ.
இந்நிலையில் கடலில் தேடச்சென்ற ஆண்ட்டோ வெள்ளியன்று மாலை 4 மணிக்கு மரணமடைந்ததாகத் தெரிகிறது. ஆனால் இவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்று இன்னமும் தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago