அமெரிக்காவின் வரி விதிப்பும் பொருளாதாரத் தடைகளும்

By டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமீப கால மாக இரண்டு விஷயங்கள் தான் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று வரி விதிப்பு இன்னொன்று பொருளாதாரத் தடை. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க, அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் சீன பொருட் களுக்கு வரி விதிப்பு செய்து வரு கிறது. இதன் மூலம் 40,000 கோடி டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்து விடலாம் என நினைக் கிறது. அமெரிக்கா இந்த நடவடிக் கையை சீனா மீது மட்டுமல்ல ஐரோப்பிய, ஆசிய பசிபிக் பகுதி களில் உள்ள நட்பு நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

ஆனால், வரி விதிப்பு மட்டுமே பிரச்சினை இல்லை. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கு வதற்கு எதிராக, நட்பு நாடான இந்தியா மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா விடம் இருந்து 500 கோடி டாலர் மதிப்புக்கு எதிரி நாட்டு ஏவுகணைகளைத் தடுத்து அழிக் கும் ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பாதுகாப்பு காரணம் காட்டி இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கலாம். அதிபர் ட்ரம்ப் நினைத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையில் இருந்து இந்தியா மீள முடியும்.

வரி விதிப்பு மற்றும் பொருளா தாரத் தடைகள் மூலம் மற்ற நாடு களுக்கு அமெரிக்கா சொல்ல வரும் விஷயம் இதுதான்… உங்கள் கொள்கைகளை வகுக்கும்போது அமெரிக்காவின் நலன் பாதிக்கும் படி நடந்து கொள்ளாதீர்கள் என்பதுதான். அதாவது இந்தியா தனது நாட்டின் பாதுகாப்புக்காக ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணை களை வாங்குவதை, அமெரிக் காவின் நலன் கருதி மறந்துவிட வேண்டும். இந்தியாவும் ரஷ்யாவும் பல ஆண்டுகளாகவே தோழமை நாடுகள். அதேபோல், இந்தியாவும் ஈரானும் கச்சா எண்ணெய், பெட் ரோலியப் பொருட்களைத் தாண்டி, பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நெருக்கமானவை.

எனவே ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ரக ஏவுகணைகளை வாங்கியதற்காக, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா நினைத்தால், இந்தியா போன்ற மிகப்பெரிய ஆயுத சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் இழக்க நேரிடும் என்பதை அமெரிக்காவும் நினை வில் கொள்ள வேண்டும். சமீப காலமாகத்தான் இந்தியா அமெரிக் காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கத் தொடங்கியுள்ளது.

நீண்ட காலமாகவே வெளி நாட்டுக் கொள்கையின் ஓர் அம்ச மாக பொருளாதாரத் தடைகள் இருந்து வந்துள்ளன. முதன் முறையாக கி.மு. 432-ம் ஆண்டில் தான் மெகரா நாட்டின் மீது அத்தீனியா தலைவர் பெரிக்ளீஸ் வர்த்தகத் தடைகளை கொண்டு வந்தார். ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆட்சி மாற்றத்துக்கு எதிராக சில நாடுகள் மீது தனித்தனி நாடுகளாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் அனைத்து நாடுகளாலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டன. பொருளாதாரத் தடை களால் உலகிலேயே அதிகம் பாதிக் கப்பட்ட நாடு வட கொரியா தான். ஆனால் இதுபோன்ற தண்டனை களால் பெரிதும் பாதிப்பில்லை என்பதால், பொருளாதாரத் தடைகளால் பயனில்லை என்ற நிலைதான் உள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டில் ஈரான் மீது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் பொருளாதாரத் தடைகளை விதித்தார். அப்போது அமெரிக்காவின் கூட்டாளிகளான ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் அதை கண்டு கொள்ளவில்லை. `அமெரிக்காவின் தடைகளால் என்ன நடந்து விடப் போகிறது? இதனால் அமெரிக்காவுக்குதான் நஷ்டம். அந்த நாட்டிடம் இருந்து வாங்க வேண்டிய பொருட்களை வேறு நாடுகளிடம் இருந்து வாங்குவோம்..’ என ஈரான் அதிபராக இருந்த ரப்சன்ஜானி தெரிவித்தார். இப்போது இருக்கும் நிலைமையில் வரி விதிப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளால் அமெரிக்காவுக்கு தேவையில்லாத பிரச்சினைகள்தான் வரும். உதாரண மாக, சீனா பதிலுக்கு அமெரிக்கா வில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல் இன்னமும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வரு கிறது. அதேபோல், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து காஸ், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை. அமெரிக்கா மீண் டும் மிகப் பெரிய நாடாக வேண்டு மென்றால் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவெடுப்பதை நிறுத்திவிட்டு, உலக நாடுகளின் தலைவராக நடந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர். வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்