உகாண்டா நிலச்சரிவில் 34 பேர் உயிரிழப்பு

By ஏஎஃப்பி

உகாண்டா நாட்டில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாயினர்.

உகாண்டாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புதுடா மாவட்டம் புகாலாசி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. புகாலாசி நகரமானது அங்குள்ள ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ளது. பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் புகாலாசி நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 34 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் குழுவின் ஆணையர் மார்ட்டின் ஓவார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: நிலச்சரிவின் காரணமாக ஆற்றின் கரையிலிருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் ஆபத்தான பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 2010-ல் இங்கு நடந்த நிலச்சரிவின்போது 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. - 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்