”குடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது”

By ஏபி

அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை வழங்கபடாது என்ற புதிய உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

குடியுரிமை இல்லாமல் அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு அங்கு குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாவார்கள், இயல்பான இந்தக் குடியுரிமைத் திட்டத்தையும் ஒழிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

அமெரிக்க இடைத் தேர்தலுக்கு முன்  குடிபெயர்ந்தவர்களுக்காக விதிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது,

”குடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது என்ற புதிய உத்தரவை விதிக்க விரும்புகிறேன்.  எனது முடிவை வெள்ளை மாளிகை வழக்கறிஞர் பரீசிலனை செய்து வருகின்றன” என்றார்.

ஆனால் இந்தத் உத்தரவு எப்போது விதிக்கப்படும் என்ற தகவலை ட்ரம்ப் உறுதியாக கூறவில்லை.

அமெரிக்க அரசியலைப்பு சட்ட 14-வது திருத்தத்தின்படி,  அந்நாட்டில்  பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்