சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வெடி விபத்து: 39 பேர் பலி

By ஏஎஃப்பி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கில் எற்பட்ட வெடி விபத்தில் 39 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வடமேற்கு பகுதியிலுள்ள சர்மதா நகரில் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 39 பேர் பலியாகினர். 12 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்” என்று கூறியுள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இப்பகுதிகள் சிரிய அரசுப்படைகள் கைபற்றுவதற்கு அடுத்த இலக்காக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிரியா போர்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.  அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும்,  ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்காவும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீதும்  அவ்வப் போது வான்வழித் தாக்குதல்களை  நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்