இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 91 பேர் பலியாகியுள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 என்று பதிவாகியது. 10 கிமீ ஆழத்திலே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் சில மணி நேரங்களுக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.இதுகுறித்து இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தரப்பில், "இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறன. 900 சுற்றுலா பயணிகள் லோம்பாக் தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மிதமுள்ள 700 சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது.
முன்னதாக 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு 220,000 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago