ஏமனில் சவுதி கூட்டுப் படை வான்வழித் தாக்குதலில் 50 குழந்தைகள் பலியான சம்பவத்தில் சவுதி விசாரணைக்கு ஐநா. சபை உத்தரவிட்டுள்ளது.
ஏமனின் வடக்குப் பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பகுதியான சாடா மாகாணத்தின் சந்தைப் பகுதியில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் குழந்தைகள்.
இந்த நிலையில் மஜ்ஸ் மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளி குழந்தைகள் சென்ற வேன் மீது சவுதிப் கூட்டுப் படைகள் தாக்கியதில் அதில் பயணம் செய்த 50 குழந்தைகள் பலியாகினர். 77 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏமன் போர்
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
ஏமனில் சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago