பிஜி தீவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8.2 என்று பதிவானதாகக் கூறிய யு.எஸ். புவியியல் ஆய்வு மையம், அதி ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி அலைகளுக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
பிஜி தீவுகள் உள்ளூர் நேரப்படி 12:19 பிஎம்-க்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் மையம் தலைநகர் சுவாவுக்கு 361 கிமீ கிழக்காகவும் 559 கிமீ ஆழத்திலும் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது.
ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், “பூகம்பம் பூமிக்கு அடியில் மிகுந்த ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளது.
பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது இங்கு கண்டப் பெருந்தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அதி ஆற்றலை வெளிப்படுத்தும் பகுதியாகும்.
முதலில் இது 8.0 பூகம்பம் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு 8.2 ஆக அதிகரிக்கப்பட்டது. அதி ஆழத்தில் ஏற்படவில்லையெனில் இது மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கும்.
இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் நிலநடுக்கம்:
இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக லோம்போக் தீவு பூகம்பத் தாக்குப் பகுதியாக மாறியுள்ளது. இன்றும் 6.3 என்று ரிக்டர் அளவில் பதிவான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கிழக்கு லோம்போக்கின் பெலண்டிங் நகருக்கு மேற்கு தென் மேற்காக மையம் கொண்டிருந்தது. இது ஆழம் குறைவாக 7 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு லோம்போக்கில் இது கடுமையாக உணரப்பட்டது என்று அங்குள்ள மக்கள் ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 min ago
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago