சிரியாவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஒயிட் ஹெல்மெட் அமைப்பினர் தீவிரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் அடையாளப் படுத்தப்பட்டு வருகிறார்கள்.
சிரிய - ரஷ்யா கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் புழுதிபறக்கும் தூசிகளுக்கு இடையே அகப்பட்டுக் கிடக்கும் சிரிய மக்களை இடிபாடுகளிலிருந்து மீட்புமருத்துவனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு.
ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவற்றில் பெண் தன்னார்வலர்கலும் அடக்கம்.
தொடர்ந்து தங்களது உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றி வரும் இவர்களை அல்கொய்தாவின் கூட்டாளிகள் என்று சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் உலா வருகின்றன. இதன்பின்னணியில் ரஷ்யா செயல்படுகிறது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கார்டியன் நடத்திய ஆய்வில், ஒயிட் ஹெல்மெட் குறித்து தவறாக சித்தரிக்கப்படும் ட்ரோல்களையும், வீடியோக்களையும் ரஷ்யா மறைமுகமாக ஆதரிக்கிறது என்ற தெரியவந்துள்ளது.
முன்னதாக ஒயிட் ஹெல்மெட்ஸ் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று எடுக்கப்படும் கடந்த வருடம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக சிரிய அதிபர் பஷாரிடம் நேர்காணல் ஒன்றில் ஒயிட்ஹெல்மெட் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க,
அதற்கு பஷார்,“ஓ.... அப்படியா, அல்கய்தாவும்... ஆஸ்கரும்... மிகச் சிறப்பாக உள்ளது” என்று கூறுவார்.
தொடர்ந்து சிரிய அதிபர் பஷாரும் ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பினரைத் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு வருகிறார். இதனால் அந்த அமைப்பின் மீது சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்தக்குற்றச்சாட்டை ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
ஏன் ஒயிட் ஹெல்மெட் குறி வைக்கப்படுகிறார்கள்
சிரிய உள்நாட்டுப் போரை பொறுத்தவரை ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பினர் இரண்டு முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார்கள். ஒன்று மக்களை மீட்டு காயமடைந்த மக்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பது.
இரண்டாவது தங்களது தலைக்கவசத்தில் அணிந்துள்ள மைக்ரோ கேமிராக்கள் மூலம் உள் நாட்டுப் போரினால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை வீடியோவாக தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றி, உலக மக்கள் கண் முன் நிறுத்துகிறார்கள். இதுதான் ஆசாத்துக்கும் ரஷ்யாவுக்கும் பிரச்சனையாக இருக்கிறது.
இதுகுறித்து சர்வதேச பொது மன்னிப்பு சபையின் மேலாளர் கிறிஸ்டியன் பெனிடிக் ”ஒயிட் ஹெல்மெட், ஆசாத் மற்றும் ரஷ்யாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இதுதான் சிரிய அதிபர் ஆசத்துக்கும், ரஷ்யாவுக்கும் ஒயிட் ஹெல்மெட் மீது இத்தகைய எதிர்மறை பிரச்சாரங்களை தொடங்க முக்கிய காரணமாக உள்ளது”என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago