சிரியாவில் நடந்த மோதலில் ஐஎஸ் இயக்க தலைவரின் மகன் அல் பத்ரி மரணம்

By ஏஎஃப்பி

சிரியாவில் நடந்த மோதலில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹ தைபா அல் பத்ரி மரணம் அடைந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள் ளது.

இதுகுறித்து ஐஎஸ் தீவிரவாத இயக்கம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய சிரியாவின் ஹாம்ஸ் நகரில் உள்ள அனல்மின் நிலையம் அருகில் ரஷ்யர்களுக் கும் நுசரியாக்களுக்கும் (அதிபர் பஷார் அல் ஆசாத் சார்ந்துள்ள சிறுபான்மை அலாவைட் மதப் பிரிவு) எதிராக ஐஎஸ் அமைப்பினர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதின் மகன் ஹ தைபா அல் பத்ரி மரணம் அடைந்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் சிறுவன் ஒருவன் துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட் டுள்ளனர்.

அல் பாக்தாதி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையின்படி அவர் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது என்று சிலர் கூறுகின்றனர். இதை ஈராக் உளவுத் துறை அதிகாரிகளும் கடந்த மே மாதம் உறுதிப்படுத்தினர். ஈராக்கில் பயங்கர தாக்குதல் நடத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது கணிசமாக ஒடுக்கப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்.

சிரியாவிலும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களும் ரஷ்ய படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 mins ago

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்