வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
“இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அந்த மாற்றம் நடக்கும் வரையில் இது அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரஸ்பர வரி விதிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தரப்பில் தகவல்.
எந்த நாட்டுக்கு எவ்வளவு வரி? - சுமார் 25 நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அரங்கும் செய்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
» மியான்மர் பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்புகள் - மீட்பு, நிவாரணப் பணி நிலவரம் என்ன?
» இந்திய விவசாய பொருட்கள் மீது 100% வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர ஆலோசனை
அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிப்பு. இதே போல கனடா சார்ந்த செலவினங்கள் குறித்தும் ட்ரம்ப் தனது கருத்தை தெரிவித்தார். மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த வரிவிதிப்புக்கு அயர்லாந்து, கனடா என உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago