ஜப்பானில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், "ஜப்பானில் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த கனமழையினால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பல இடங்களில் வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இந்த வெள்ளத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளப் பெருகுக்கு ஒகயமா நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சுமாr 18 பேர் ஒகயமா மாகாணத்தில் மட்டும் மாயமாகியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ள நீர் இன்னும் பல இடங்களில் வடியாததால் மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ உதவிகள் முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளம் குறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷியேட் கூறும்போது, "ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட பெரிய இயற்கை பேரிடராக இது கருதப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம்"என்று கூறியுள்ளார்.
இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் எதிரொலியாக ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
15 mins ago
உலகம்
10 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago