அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடங்கியுள்ளது. எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. இது தொடர்பான படங்கள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாராம் கூட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரியா இன்னும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டியிருந்தார்.
முன்னதாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், ட்ரம்ப்பும் கடந்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையை வடகொரியா உடனடியாகத் தொடங்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூலிப்படைத் தலைவனைப் போலச் செயல்படுவதாக வடகொரியா குற்றம் சாட்டியது. மேலும் உயர்நிலைப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் நிபந்தனைகள் பிரச்சினைக்குரிய வகையில் இருப்பதாக வடகொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago