“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” - ட்ரம்ப் தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அரசு 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, “ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரின் காரணமாக இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் அவசியம்.

இந்த போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யாவும் ஒப்புக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த போர் நிறுத்த அவசியத்தை உணர்ந்து ரஷ்யா அதனை ஏற்கும்படி நம்மால் செய்ய முடிந்தால் அது மிகப்பெரிய விஷயம். ஒருவேளை அப்படிச் செய்ய முடியாமல் போனால், இன்னும் நிறைய மக்கள் கொல்லப்படுவார்கள்” கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது, “இன்று நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உடனடி அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி உக்ரைனை சம்மதிக்க வைத்துள்ளோம்” என்று ஊடகங்களிடன் கூறினார்.

மேலும் எக்ஸ் பக்கத்தில் இது பற்றி குறிப்பிடும்போது, “உக்ரைனின் இந்த தயார் நிலை, போர் நிறுத்தத்துக்கான விருப்பம் நீடித்த அமைதிக்கு அருகில் எடுத்துவைக்கப்பட்டுள்ள அடியாகும். அமெரிக்க அதிபரின் தலைமையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் உதவியாலும் உக்ரைன் அமைதியை மீட்டெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இப்போது எல்லாம் ரஷ்யாவின் கைகளில்தான் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாது போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியுள்ளதால் உக்ரைனுக்கு நிறுத்திவைத்திருந்த உளவுத் தகவல் பகிர்தல் சேவை, பாதுகாப்பு சேவை ஆகியனவற்றை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்