ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு

By ஏபி

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருதுக்கு இந்தியர்கள் பரத் வத்வானி, சோனம் வாங்சக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் மகசேசவின் நினைவாக பிலிப்பைன்ஸ் அரசால் ரமோன் மகசாசே விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் நோபல் பரிசு என்று இந்த விருது அழைக்கப்படுகிறது.

2017-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது இந்தியர் மருத்துவர் பரத் வத்வானி, சோனம் வாங்சக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை ஓரம் ஆதரவற்று இருப்பவர்களைத் தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு மனநிலசிகிச்சை, உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அளித்துப் பராமரித்து அவர்கள் உடல் நலம் பெற்றதும் அவர்களைக் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கும் பணியை பரத் வத்வானி செய்தார். இதற்காகக் கடந்த 1988-ம் ஆண்டு சாரதா புனர்வாழ்வு அறக்கட்டளையைத் தொடங்கினார்.

சாலை ஓரம் ஆதரவற்று இருப்பவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் பணியை போலீஸார், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் செய்தார் மருத்துவர் பரத் வத்வானி. இவரின் சேவையைப் பாராட்டி மகசேசே விருது வழங்கப்பட உள்ளது.

மகசேசே விருதுக்குத் தேர்வான மற்றொரு இந்தியர் சோனம் வாங்கக் 1988-ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். லடாக்கில் மாணவர்களுக்கான கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தைத் தொடங்கினார். அரசுத்தேர்வில் 95 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்காகப் பயிற்சி வகுப்புகளை சோனம் தொடங்கினார்.

கடந்த 1994-ம் ஆண்டு ஆப்ரேஷன் நியூ ஹோப்(ஓஎன்எச்) என்ற இயக்கத்தைத் தொடங்கி கல்விச் சேவையை விரிவுபடுத்தினார். இவரின் சீரிய பயிற்சியால், 700 ஆசிரியர்களையும், 1000 கிராம கல்வி குழுத் தலைவர்களை(விஇசி) உருவாக்கினார். கடந்த 1996-ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் 5 சதவீதமாக இருந்த தேர்ச்சிவீதம் 2015-ம் ஆண்டில் 75 சதவீதமாக உயர்ந்தது.

மேலும், கம்போடியாவின் யூக் சாங், கிழக்கு தைமூரின் லூர்டெஸ் மார்டின் குரூஸ், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஹோவர்ட் டே, வியட்நாம் நாட்டைச்சேர்ந்த ஹோவாங் யென் ரோம் ஆகியோர் மகசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்